Monday, November 29, 2010

நவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்

கடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் எல்லா வகையான வேற்றுமைகளையும் களைந்து உலக சமுதாயங்களின் கலாசாரக் கொள்கை சார்ந்த தனித்துவங்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாறியுள்ளது. ஒருவர் தான் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தணிக்கை என்பதற்கே இடமில்லாமல் போய்விட்டது.

மேற்குலகமே இந்த கலாச்சாரப் படையெடுப்பை மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பலியாவோரே நாம். மேற்குலகு அதன் அரசியல், பொருளாதார, இராணுவ சக்திகளுடன் தொழி;ல் நுட்ப முன்னேற்றத்தையும் கொண்டு அதன் கலாசார திணிப்பை செய்து வருகின்றது.இந்தப் படையெடுப்புக்கு முன்னால் எமது நிலைப்பாடு என்ன? இதிலிருந்து எமது நம்பிக்கைகள், விழுமியங்கள், ஒழுக்க மாண்புகள், கலாசாரம் முதலியவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்?

Internet உட்பட நவீன தொடர்பாடல், தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் இஸ்லாத்தைப் பற்றி ஏராளமான விடயங்கள் உலகளாவிய ரீதியில் பரப்பப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இஸ்லாத்திற்கு எதிரானவை, அதைத் தூற்றுபவை; அதன் மீது சேறு பூசுபவை. இதற்காக எவரையும் சாடுவதில் அர்த்தமில்லை. குற்றவாளிகள் நாங்களே.

ஏன் நாம் நவீன தொடர்பாடல் சாதனங்களுடன் ஓர் உடன்பாடான நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது? அவற்றை ஏன் எமது நலன்களுக்காக நாம் பயன்படுத்த முடியாது? எதற்காக அவற்றை எமது எதிரிகளிடம் மட்டும் விட்டு வைத்தல் வேண்டும்?

இன்று உலகில் Internet சாதனத்தைப் பயன்படுத்துவோர் தொகை பலகோடி. இவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கும் 50 சத வீதத்தால் அதிகரிக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இளைய தலைமுறையினர் இத்தகைய சாதனங்களினால் தீவிரமாகக் கவரப்பட்டு வருகின்றனர்.

தொடர்பாடல் சாதனங்களுக்கூடாக இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் முன்வைக்கப்படும் விஷமத்தனமான கருத்துக்களால் முஸ்லிமல்லாதோர் மட்டுமன்றி முஸ்லிம்களே பிழையாக வழி நடத்தப்படும் ஆபத்து தோன்றியுள்ளது. காதியானிகள் Internet சாதனத்தைப் பயன்படுத்தி தமது கொள்கைப் பிரசாரத்தைச் செய்து வருகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரிலேயே இவர்களது பிரசார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இவர்களது மார்க்க விளக்கங்கள், சட்டத் தீர்ப்புக்களெல்லாம் பிரசுரிக்கப்படுகின்றன.

இஸ்லாத்தை உலகின் மூலை முடுக்குகளிளெல்லாம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை, ஒவ்வொரு வீட்டின் கதவையும் இலகுவில் தட்டக்கூடிய சந்தர்ப்பத்தை நவீன தொடர்பாடல் ஊடகங்கள் நமக்குத் தருகின்றன. எனவே அல்லாஹ்வுடைய தீனை உலகில் மேலோங்கச் செய்யும் நோக்குடன் இவற்றையும் நாம் பயன்படுத்த முன்வரல் வேண்டும்.

நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்துக்களையும் இங்கே உதாசீனப்படுத்தல் முடியாது. அவை இன்று பெரும்பாலும், தீமைகளின் வாயிலாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. தஃவாவுக்காக இவற்றைப் பயன்படுத்தப்போய் - குளிப்பதற்காகச் சென்று சேற்றைப் பூசிக்கொண்டவரின் கதையாகி விடலாகாது. எனவே மிக எச்சரிக்கையுடனும் விழிப்புடனும்- ஜாஹிலிய்யத்தின் வளையில் சிக்கிவிடாது- இவற்றை மிகவும் பொறுமையுடன் கையாள்வதற்கு முயற்சி செய்தல் வேண்டும்.

''(நபியே) நீர் (மனிதர்களை) விவேகத்தைக் கொண்டும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமது இறைவனின் வழியின் பால் அழைப்பீராக! ஆன்றியும் எது மிக அழகானதோ (சிறந்ததோ) அதைக் கொண்டும் அவர்களுடன் விவாதிப்பீராக''(ஸூறா 16:125)

நன்றி: http://www.sheikhagar.org/thoughts?start=7

பண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி

மனித இன வரலாற்றில் பல சமூகங்கள் தோன்றி மறைந்துள்ளன, பல நாகரிகங்கள் உருவாகி அழிந்துள்ளன. இவற்றின் எழுச்சிக்கு துணைநின்ற காரணிகளையும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்த அம்சங்களையும் ஆராயும்போது ஒரு முக்கிய உண்மை புலனாகிறது. ஒரு சமூகம் அதற்கேயுரிய ஒழுக்க விழுமியங்களிலும் பண்பாடுகளிலும் நிலைத்து நின்றபோது அந்த சமூகம் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கின்றது. வளமுடன் விளங்குகின்றது. உலக நாகரிகத்திற்கு தனது உன்னத பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றது. ஆனால் அச்சமூகம் தனது ஒழுக்க மாண்புகளையும் தான் கடைப்பிடித்து வந்த பண்பாடுகளையும் கைவிடுகின்ற போது அது படிப்படியாக வீழ்ச்சியடைந்து அடையாளம் தெரியாமல் மறைந்து விடுகின்றது. இதுவே வரலாறு கூறும் அந்தப் பாரிய உண்மை.

முஸ்லிம் சமூகத்திற்கும் இவ்வரலாற்று நியதி பொருந்தும். முஸ்லிம்களின் வரலாறு இதற்கு சான்று பகர்கின்றது. முஸ்லிம் சமூகம் இஸ்லாத்திலும் அதன் உயரிய பண்பாடுகளிலும் குணவொழுக் கங்களிலும் உறுதியாக நின்ற காலத்தில் அது ஓர் உலகளாவிய சாம்ராஜ்யத்திற்கு பாத்தியதையுடையதாக விளங்கியது. ஆனால் என்று அதன் பண்பாடுகளில் பலவீனம் தோன்ற ஆரம்பித்ததோ அன்று அதன் வீழ்ச்சியும் தொடங்கியது. இன்றுவரை அவ்வீழ்ச்சியை தடுத்துநிறுத்த முடியவில்லை. ஆனால் துரதிஷ்டம் யாதெனில் முஸ்லிம் சமூகம் இன்னும் இந்த அடிப்படை கோளாரை சரியாக இனங்கண்டு கொண்டதாக இல்லை என்பதுதான். இதனால் இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கான முயற்சிகளிலும் இவ்வம்சம் உரிய இடத்தையும் முக்கியத்துவத்தையும் பெறாமல் இருந்து வருகின்றது.

இன்று நாம் உலகளாவிய ஓர் இஸ்லாமிய மறுமலர்ச்சியைக் காண்பது உண்மை. ஆனால் இங்கு அஹ்காம் எனும் சட்டங்களைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சி அக்லாக் எனும் பண்பாடுகளையும் ஒழுக்கங்களையும் கடைப்பிடிப்பதில் உருவாகியுள்ளதாக தெரியவில்லை. தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் முதலான கடமைகளுடன் தொடர்புடைய அஹ்காம்களை அலட்டிக்கொள்ளும் அளவுக்கு அவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய அக்லாக்களைப் பற்றி நாம் கரிசனை கொள்வதில்லை. இதனால் எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப உறவுகளிலும், சமூகத் தொடர்புகளிலும் பேணப்பட வேண்டிய பண்புகள் பல புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது. குறிப்பாக எமது இளைய தலைமுறையினர் பண்பாட்டுப் பயிற்சிகளைப் பெறாத நிலையில் வளர்ந்து வருகின்றனர். வீடு, பாடசாலை, மஸ்ஜித், வீதி முதலான இடங்களில் எவ்வாறு நடந்துகொள்வது என்பதைக்கூட தெரியாத நிலையில் சமூகத்தில் பலர் இருந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் முழு உலகிற்கும் பண்பாட்டை, நாகரிகத்தை வழங்கிய ஒரு சமூகத்தின் நிலை இன்று இவ்வாறு மாறியுள்ளமை எவ்வளவு கவலைக்குரியது?! நம்பிக்கை, நாணயம், வாய்மை, வாக்கு மாறாமை, நேரந்தவறாமை, ஒழுங்கு, கட்டுப்பாடு, பிறர் நலன் பேணல் போன்ற உயரிய இஸ்லாமிய குணப் பண்புகள் எம்மை விட்டு விடைபெற்று சென்றுவிடுமோ என நினைக்கத் தோன்றுகின்றது.

எமது சமூகத்தின் தனி மனிதர்களின் ஒழுங்கற்ற நடத்தைகள் முழு சமூகத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, இன்று எமது சமூகத்தில் ஒரு பண்பாட்டுப் புரட்சியையே செய்ய வேண்டியுள்ளது. இத்துறையில் ஒரு பாரிய பிரசார முயற்சி முடுக்கிவிடப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

எமது தஃவாக் களங்களை, குறித்த இவ்வம்சத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பயன்படுத்த முயல்வது இன்றைய காலத்தின் தேவையும் சன்மார்க்கக் கடமையுமாகும். இல்லாதபோது எம் சமூகத்தின் வீழ்ச்சியை - அல்லாஹ் நாடினால் அன்றி, - எவராலும் தடுத்துநிறுத்த முடியாமல் போய்விடும்.

நன்றி: http://www.sheikhagar.org/thoughts?start=2

Sunday, November 28, 2010

அமெரிக்க அட்டூழியம் - பரபரப்பைக் கிளப்பிய 'விக்கி லீக்ஸ்' இணையதளம்

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
அமெரிக்காவின் அட்டூழியங்கள் வெளிச்சத்துக்கு வரும் பொழுது அதன் நிஜத் தோற்றத்தை அறியாதவர்களும் அறிந்து கொள்ள முடிகின்றது. முஸ்லீம்கள் மீதான இன ஒழிப்பு நடவடிக்கை மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் உற்பூசல்களை ஏற்படுத்ததுதல் போன்ற விடயங்களை செவ்வனே நிறைவேற்றுவதில் மகாகெட்டிக்காரனாக அமெரிக்கா திகழ்கின்றது!

'தேனீ' இணைய தளத்திலிருந்து உங்கள் பார்வைக்காக:
"விக்கி லீக்ஸ் விவகாரம்: இந்தியா, பிரிட்டனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.
நியூயார்க் : ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்திய அட்டூழியத்தை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய, "விக்கி லீக்ஸ்' இணையதளம், இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பல்வேறு ரகசிய ஆவணங்களை வெளியிடப் போவதாக அறிவித்ததையடுத்து, அமெரிக்கா தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, இது தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலியன் அசேஞ்ச் என்பவர் நிறுவிய, "விக்கிலீக்ஸ்' நிறுவனம், கடந்த அக்டோபரில் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய போர் அட்டூழியங்கள் குறித்த நான்கு லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதன்பின், ஆப்கனில் அமெரிக்காவின் போர் குறித்த 90 ஆயிரம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. இதையடுத்து, ஜூலியன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒருவாரம் முன்பு அவரைக் கைது செய்வதற்கு, ஸ்விட்சர்லாந்து கோர்ட் ஒன்று அனுமதி அளித்தது. இந்நிலையில், இவ்வார ஆரம்பத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜூலியன், "அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பற்றிய ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும். இதுவரை வெளியிட்டதை விட அவை ஏழு மடங்கு அதிகமாக இருக்கும்' என தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

கூட்டணி நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை:ஆனால் எப்போது அந்த ஆவணங்கள் வெளியிடப்படும் என்ற தகவலை அவர் கூறவில்லை. அவரது பேட்டிக்குப் பின், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மத்தியில் கிலி பிடித்துள்ளது. அதனால், தன் கூட்டணி நாடுகளான இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அமெரிக்கா நேற்று முன்னெச்சரிக்கைத் தகவல் ஒன்றை இது தொடர்பாக விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே. கிரவுலி கூறியதாவது: ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படக் கூடும் என இந்தியாவை எச்சரித்துள்ளோம். ஆனால், "விக்கிலீக்ஸ்' தன்னிடம் வைத்திருக்கும் ஆவணங்கள் குறித்து எங்களுக்கு சரியாக எதுவும் தெரியவில்லை. இந்த ஆவணங்கள் வெளியிடப்படக் கூடாது.இந்த ஆவணங்களை வெளியிடுவது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் நாட்டு நலன்களுக்கு ஆபத்தையே விளைவிக்கும். இணையம் மூலம் ஒவ்வொரு அரசும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அதன் மூலம் பரஸ்பரம் நம்பிக்கையும் ஏற்படுகிறது. இந்தக் கருத்துக்கள் பத்திரிகைகள் மற்றும் "டிவி', ரேடியோக்களில் தலைப்புச் செய்தியாக வரும் போது அந்த நம்பிக்கை போய்விடுகிறது.இப்படி வெளியிடுவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கிடையில் ஒரு வித பதட்டத்தை உருவாக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.இவ்வாறு கிரவுலி தெரிவித்தார்."விக்கிலீக்சின் தொடரும் இந்த நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமானவை' என, ராணுவ அதிகாரிகளின் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பயம் ஏன்?"விக்கிலீக்ஸ்' வெளியிட்ட ஈராக் தொடர்பான ஆவணங்கள், அமெரிக்க வீரர்கள் ஈராக்கியர்களை எவ்விதம் சித்ரவதை செய்தனர் என்பதை விரிவாக விளக்குகின்றன. மேலும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி படைகள் நடந்து கொண்டதையும் அவை காட்டுகின்றன.இந்நிலையில், ஈராக்கிலுள்ள அல்-குவைதா பயங்கரவாதிகளுக்கு துருக்கி உதவியது, ஈராக்கில் உள்ள ஓர் இனமான குர்திஷ் இனத்தவரை துருக்கிக்கு எதிராக கலகத்தில் ஈடுபடும் படி அமெரிக்கா தூண்டியது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்யும் ரகசிய உதவிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகவல்கள் வெளியானால், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றுதான் அமெரிக்கா பயப்படுகிறது.

இந்திய முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல - அமெரிக்க அதிகாரி

(பழமையை தட்டிப்பார்ப்பதில் உணர்வு பெறுவோம்)

வாஷிங்டன்: இந்தியாவில் உள்ள 160 மில்லியன் முஸ்லீம்களும் தீவிரவாதிகள் கிடையாது என்றும்,என் சமூகம் இப்படி அழைக்கப்படுவதை கண்டு நொந்துப்போயுள்ளதாக இந்திய அமெரிக்கரும், ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஃபராஹ் பண்டித் கூறியுள்ளார்.

இந்தியாவில் முஸ்லீம்களின் தீவிரவாதம் தலைதூகியுள்ளதா? என்ற கேள்விக்கு ஃபராஹ் ஆவேசமாக பதிலளிக்கையில், ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதிகள் கிடையாது என்றார்.

முஸ்லீம்கள் எந்த விதமான தீவிரவாதத்திலும் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிய ஃபராஹ்,உண்மையைச் சொல்லபோனால் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள 'தீவிரவாதக் கறையை' முஸ்லீம்கள் துடைத்தெறிய போராடுகிறார்கள் என்றார்.

'மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இதில் முஸ்லீம்களும் அடங்குவர் அவர்களும் அவாறான மத்திரையை களைய போராடுகிறார்கள்' என்றார்.

இந்நாடுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்ந்துவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.நடந்து கொண்டிருக்கும் போர்களைப் பற்றி கேள்வி கேட்டபோது, இப்போர்கள் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்ற ஒபாமாவின் கருத்தை ஃபராஹ் முன்மொழிந்தார்.

தேங்க்ஸ்: http://knrtimes.blogspot.com/2010/07/blog-post_8502.html

Saturday, November 27, 2010

54 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் பொலிஸாரினால்தீவைப்பு. கிண்ணியாவில் சம்பவம்


கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கிண்ணியாவிலுள்ள கண்டால் காடு என்ற ஊரில் 54 முஸ்லிம் வீடுகள் ( ஒலைகுடிசைகள் ) பொலிஸாரினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக lankaenews.com என்ற இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது.

எரிக்கப்பட்டநிலையில் உள்ளவீடுகளும், அதற்கு அருகாமையில் வீட்டை இழந்து தனது பொதிகளுடனும், குடும்பத்தாருடனும் அமர்திருக்கும் மக்களின் புகைப்படங்கள்.

சொந்தக் கானியில் குடியேர முடியாத கிண்ணியா முஸ்லிம்கள்!

அண்மையில் வெளியான செய்தி: கிண்ணியா முஸ்லிம்கள் போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
(சிறுபான்மை இனத்துக்கெதிரான அடாவடித்தனங்களில் இதுவும் ஒன்று).
கண்டல்காட்டுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமது இடங்களுக்குத் திரும்பியிருந்தனர். ஆனால் கடந்த திங்கட்கிழமை அன்று அப்பகுதிக்குச் சென்ற கிண்ணியா போலீசார் மேற்படி குடிசைகளுக்குத் தீவைத்ததோடு, முஸ்லிம் மக்களால் பயிரிடப்பட்டிருந்த பயிர்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இம்மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு எதுவித அறிவித்தலையும் விடுவிக்காத போலீஸ் இவ்வாறு அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.இதனைக் கண்டிக்கும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை அன்று கிண்ணியா நகரத்திலுள்ள புகாரி சந்தியில் தமது ஜும்மா வழிபாடுகளை முடித்துக் கொண்ட முஸ்லிம்கள் போலீசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசின் அடாவடியைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பலவும் எடுத்துச் செல்லப்பட்டன.மேலும், தமது சொந்த நிலத்தில் குடியேற நிர்வாக அதிகாரிகள் தம்மை அனுமதிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

'வடக்கில் சிங்களவர்கள் குடியேறுவதை தவறென்பது எப்படி? : ஜனாதிபதி கேள்வி'

இன்று 'தேனீ' இணைதளத்தில், 'கொழும்பில் தமிழர், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்களவர்கள் குடியேறுவதை தவறென்பது எப்படி? : ஜனாதிபதி கேள்வி' என்ற ஆக்கத்தைப் படிக்க நேர்ந்தது. அதில் மேல் மாகாண சபை உறுப்பினரான குமரகுருபரன், அச்சந்திப்பு தொடர்பாக கூறுகையில், 'வடக்கில் இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். அதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஜனாதிபதி, 'கொழும்பில் தமிழ், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமென்றால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை எப்படி தவறு எனக் கூறமுடியும்' என கேள்வி எழுப்பினார்), என்ற பகுதியானது நடுநிலையற்ற போக்கையும், ஆதிக்க எண்ணத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கருத்தாகவே கணிக்க வேண்டும்.

உண்மையில் வடகிழக்கில் இராணுவக் குடியேற்றம் மற்றும் சிங்கள குடியேற்றத் திணிப்பு போன்ற நிகழ்ச்சிகள் அரசின் நேரடி உதவியோடும், படை அதிகாரிகளின் ஒத்தழைப்போடும் அரங்கேற்றப்படுகின்றன. இவற்றுக்கும் கொழும்பில் ஆண்டாண்டு காலமாக தமிழ் மற்றும் முஸ்லீம்களின் குடியிருப்பு, வியாபாரம் முதலானவை வியாபித்து இருப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.

வடகிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம்களது சொத்துக்களும் உடமைகளும் குறிப்பாக காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களவர்களை பலாத்காரமாக குடியமர்த்துவதற்கும், கொழும்பு போன்ற பிரதேசங்களில் தமிழ் மற்றும் முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்ற அதேநேரம் தாம் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தில் காணிகளை கொல்வனவு செய்து வீடுகளை அமைத்து குடித்தனம் நடத்துவதற்கம் இருக்கும வித்தியாசத்தை அனைவரும் அறிவர். இது ஜனாதிபதி அவர்களுக்கும் கூட நன்கு தெறியும். இது போன்ற ஆதிக்க மனப்பான்மையும், சிறுபான்மையினரின் உடமைகள் மீது அநீதியாக நடந்து கொள்வதும் மலர்ந்திருக்கும் இந்த சுமூகமான சுழலை சீர்குலைப்பதாகவே அமையும் என்பதை இந்த இணையத்தின் மூலமாக உணர்த்த விரும்புகின்றேன். சான்றோர் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் பட்சத்தில் விளைவுகளைத் தவிர்க்கலாம் என்பது அடியேனின் கருத்தாகும்.

Wednesday, November 24, 2010

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்

உலகின் ஆதிக்குடிகளுக்கான தேடலும் உலகம் தழுவும் தூதுக்கான புதிய திசை வழியும்.

இதுகாறும் உருவாக்கப்பட்ட வரலாறுகள் ஆதிக்க சக்திகளின் வரலாறாகவே, ஆதிக்க சக்திகளை நியாயப்படுத்தும் வரலாறாகவே, ஆதிக்க சக்திகளைப் பெருமைப்படுத்தும் வரலாறாகவே இருக்கின்றன. இன்றுவரை ஆதிக்க சக்திகளின் கருவியாகவே வரலாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாறு ஆதிக்க சக்திகளின் வரலாறாக இருப்பதால்தான் மன்னர்களின் போர்களும் ஆடம்பரங்களும் இரக்கமற்ற செயல்களும் பட்டியலிடப்படுகின்றன. மன்னர்களின் சாதனைகளும் வீரப் பிரதாபங்களையும் பட்டியலிடும் வரலாற்று நூல்கள் வரலாற்றுக்குப் பயன்படும் சில செய்திகளைக் கொண்டிருந்தாலும் அவற்றை முழுமையான வரலாறாக அப்படியே ஏற்க முடியாது.

புகழ்ந்துரைப்பது, பெருமைப்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக எழுதப்பட்ட இந்நூல்களில் யாரைப் பெருமைப்படுத்த எழுதினார்களோ அவர்களை அண்டியே அவர்களது தயவில் வாழ்க்கை நடத்தும் அந்த எழுத்தாளர்களுக்கு குறைநிறைகளை ஒளிக்காமல் தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கும் துணிச்சல் அல்லது வரலாற்றுப் பார்வை இருப்பதில்லை. அவ்வாறே எந்தக் கல்வெட்டும் அதைச் செதுக்கிய மன்னனின் தோல்விகளையும் தவறுகளையும் பட்டியலிடுவதில்லை. அதாவது தற்பெருமைகள் வரலாறாவதில்லை. அது சரியான, நேர்மையான வரலாறாகக் கதைக்கப்படுவதுமில்லை.

வெறும் புகழுரைகளை மையமாக வைத்து வரலாறு படைக்கும் போக்கிலிருந்து அல்குர்ஆன் வித்தியாசப்படுகிறது. அது எந்த மன்னரையும் புகழ்நிலையில் வைத்துப் பேசுவதில்லை. வரலாற்றிற்கான ஆதாரங்கள், அதற்கான சான்றுகள் அனைத்துமே ஆதிக்க சக்திகளின் கருவிகளாக இருக்கும்போது ஒடுக்கப்பட்ட மக்களின், மண்ணின், பூர்வீகக் குடிகளின் அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களின் வரலாறுகளைப் படைப்பதும் பார்ப்பதும் எவ்வாறு சாத்தியமாகும்? ஆளப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்போரை மையமாகக் கொண்ட வரலாற்றை உருவாக்கும் சாத்தியக்கூறு உண்டா?

“வரலாற்றை விளக்குபவன்தான் வரலாற்றை உருவாக்குகிறான். நிகழ்வுகளைப் பட்டியலிடுவது மட்டும் வரலாறாகிவிடமாட்டாது. அவற்றை விளக்குவதில்தான் வரலாறு இருக்கிறது” என்று பேராசிரியர் முஹம்மத் குதுப் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்.

உண்மையில் விளக்குவதில்தான் வரலாறு இருக்கிறது. எதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறோமோ அதை விளக்குவதில்தான் வரலாறு இருக்கிறது. ஆகவே, தமது அக்கறைகளின், ஆர்வங்களின் நோக்கங்களின் அடிப்படையில்தான் நிகழ்வுகளைத் தேர்வு செய்வதும் அவற்றை விளக்குவதும் ஒவ்வொன்றாகத் தொடர்புபடுத்தி தத்துவத் தெளிவு பெறுவதும் அமைகின்றது.

ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, ஆளப்பட்டவர்கள், உழைத்து வாழ்பவர்கள், உரிமைகளை இழந்தவர்கள் மீது நமது அக்கறை இருப்பின், நமது வரலாற்றுப் பார்வை அவர்களைப் பற்றிய உண்மைகளை அறிவதிலும் அவர்களின் மறைமுகமான போராட்டங்களைப் புரிந்து கொள்வதிலும் மனித குலம் நாகரிகத்தின் முழுமையை நோக்கிச் செல்வதில் அவர்களது பங்களிப்பை உரியமுறையில் உணர்ந்து வெளிப்படுத்துவதற்குமாக நமது வரலாற்றுப்பார்வை கூர்மையடைய வேண்டும்.

வரலாற்று மூலங்களாக உள்ளவை எல்லாம் ஆதிக்க சக்திகளால் ஆதிக்க சக்திகளுக்கு சாதகமாக அவர்களை நியாயப்படுத்தும் வகையில் இருந்தாலும் பூர்வீகக் குடிகளின் வரலாற்றை அறிவதற்குப் போதுமான தடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத் தேடித்தெரிந்து கொள்ளவும் வரலாற்றுக்குப் பயன்படுத்தவும் அடிப்படையான தகுதியும் கருவியும்தான் விமர்சனப்பார்வை ஆகும். அதாவது சரியான வரலாற்றுப் பார்வை, சரியான வரலாற்றுணர்வு, அறிவு நாணயத்துடனான விமரிசனப்பார்வை இவை ஆதிக்குடிகளின் இந்த மண்ணில் வேரோடி அழிக்க முடியாதவாறு ஆகிவிட்ட நமது மக்களின் வரலாற்றை அறிய அடிப்படைகளாக அமைகின்றன.

வரலாறு கண்ட முதல் நிலம் இலங்கை. ஆனால் இலங்கை முஸ்லிம்கள் அந்த வரலாற்றைத் தம்மகத்தில் சுமந்திருந்தும் உரத்துச் சொல்ல முடியாதவர்களாக தயங்கிக் கொண்டிருந்தனர். அது உலகின் எல்லாத் தேசங்களுக்கும் நாடுகளுக்கும் முற்பட்ட எல்லா நாடுகளையும் விட நீடித்த தொடர்ச்சியான வரலாறாகும். ஆனால், வரலாற்றெழுதியல் தொடங்கிய காலத்துக்கு முன்பிருந்தே அவர்கள் உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் கொண்டவர்களாக விளங்கினர். இயற்கை அனர்த்தங்களாலும் வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் ஆதிக்க சக்திகளால் அழிக்கப்பட்டும் கபளீகரம் செய்யப்பட்டும் இன்றுவரை அவர்கள் வாழ்ந்துவருவது இறைவனின் பெருங் கருணையாகும்.

முகவுரையாகத் தந்த இந்த வரலாற்று நோக்குநிலையிலிருந்து முகிழ்த்த நூல்தான் அ.வா. முஹ்சீன் எழுதிய “இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம்” என்ற வரலாற்றுப் பொக்கிஷமாகும்.

சுமார் 210 பக்கங்களைக் கொண்ட இந்நூல் வரலாற்றுத் துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, நமது வரலாற்றை அறிய விரும்புகின்ற யாருக்கும் அதிர்வையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கப் போவதில்லை. எந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எம்மீதான இனச்சுத்திகரிப்பையும் இன அழிப்பையும் நியாயப்படுத்தினார்களோ அந்த வரலாற்றுக்கு ஓர் எதிர் வரலாற்று எடுத்துரைப்பாக, எதிர்க் கதையாடலாக இந்நூல் அமைகிறது.

புத்தரே பிறக்காத ஒரு நாட்டை புத்தரின் தேசம் (மே புதுன்கே தேஷய) எனக் கட்டமைப்பவர்களுக்கு இந்நூல் ஒரு சாட்டையடியாகும். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் சேர். பொன். இராமநாதனுக்கு ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் கொடுத்த சாட்டையடியை விட இந்நூல் பல படிகள் தாண்டிவிட்டதென்றே தோன்றுகிறது.

அராபிய ஆண்வழித்தோன்றல் என்ற நூறு வருட கதையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்நூல் முதன் முதலில் இந்நாட்டில் பாதச் சுவட்டைப் பதித்த ஆதி பிதா ஆதம் நபியின் நேரடி வாரிசுகளே இலங்கை முஸ்மிகள் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது. கி.பி 8 ஆம் நூற்றாண்டில்தான் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடங்குகிறது என்ற கதையளப்பு இதன் மூலம் தகர்க்கப்படுகிறது.

இலங்கை முஸ்லிம்கள் அரபுக்களின் வழித்தோன்றல்கள் / வந்தேறு குடிகள் / இலங்கை முஸ்லிம்கள் இனரீதியாகத் தமிழர்கள் / இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களாக இருந்து மதம் மாறியவர்கள் என்று இதுகாறும் கூறப்பட்டு வந்த மொழிபுகள் எல்லாம் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை நிறுவ உதவவில்லை. யாத்திரிகர்காளும் தேசாதிபதிகளாலும் காலனித்துவ உத்தியோகத்தர்களாலும் எழுதப்படும் வரலாறு முழுமையானதல்ல. அல்குர்ஆனின் அடிப்படையிலான வரலாற்று அணுகுமுறை தேவை என்பதை இந்நூல் வலியுறுத்துகின்றது. இன்று இலங்கை எதிர்கொள்ளும் இனச்சங்காரத்திலிருந்து விடுபட்டு “சகஜீவனம்” என்ற சிந்தனையை நோக்கி நகர்வதற்கான புதிய திசை வழிகளையும் இந்நூல் கோடிகாட்டிச் செல்கிறது.

ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூல், முதலாம் இயலில் அறிவு குறித்த கோட்பாட்டுப் பரிசீலனையை மேற்கொள்கிறது. அனுபவம், விஞ்ஞானம், கணிதம், வரலாறு, தர்க்கம், தத்துவம், பகுத்தறிவு போன்ற அறிவின் பன்முகக் கூறுகளை விளக்கும் இவ்வியல், நம்பிக்கையை அறிவின் ஒரு வடிவமாகப் பார்க்கச் சொல்கிறது. இவ்வகை அறிவுகள் அனைத்தும் தம்மளவில் தனித்தன்மை கொண்டவையாகவும் மனித வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து தமக்குரிய முக்கியத்துவங்களைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. ஒரு அறிவு வகையை முதன்மைப் படுத்துவதோ அல்லது உயர்நிலைப்படுத்துவதோ இறுதியில் அறிவியல்ரீதியான அதிகாரப் படிநிலையை உருவாக்குவதாகவே அமையும். நவீனத்துவம் வழங்கிய பிரதிகூலங்களில் இவ்வதிகாரப் படிநிலையும் ஒன்றாகும்.

கிறிஸ்தவ மத அதிகாரத்தை எதிர்க்கப் புறப்பட்ட அறிவொளிக்காலப் புத்திஜீவிகள் ஒட்டுமொத்த மானுட நம்பிக்கைகளையும் அறிவியல் துறையிலிருந்து புறமொதுக்கி துடக்கு மனப்பான்மையுடன் அணுகினர். ஆனால் இந்நிலை இன்று மாறி வருகிறது. பின் நவீனச் சிந்தனைகள் நம்பிக்கையையும் அறிவாக நோக்கும் நிலையையும் தோற்றுவித்துள்ளன. எல்லாவற்றையும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்ற வற்புறுத்தல் இதன் மூலம் தகர்க்கப்படுகின்றது.

பிற சமூகங்கள் மீதான ஆக்கிரமிப்பு, சுரண்டல், கொலை, கொள்ளை, கட்டுப்பாடு, நிர்ப்பந்தம் போன்ற வழிமுறைகளினூடாக தமக்குரிய அறிதல் முறையாக விஞ்ஞானத்தை வளர்த்து வந்திருக்கின்ற இன்றைய மேற்கத்திய சமூகங்களின் அத்தகைய வாய்ப்புகளையும் அறிதல் முறைகளையும் கொண்டிராத சமூகங்களின் அனுபவ அறிவு, நம்பிக்கைள் போன்றவற்றை ஒதுக்கித்தள்ளி, அந்த சமூகங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
இந்நிலையில் தமது வராற்றைப் புதிதாய் எழுதவேண்டிய அவசியத்தில் உள்ள சமூகங்கள் அறிவின் பல்வேறு வடிவங்களைப் புரிந்து கொள்வதோடு அவை ஒவ்வொன்றும் கொண்டிருக்கின்ற முக்கியத்துவத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்துவது அவசியமாகிறது என்று ஆசிரியர் கூறுகின்றார்.

இது கிழவிகளின் கதை, கர்ண பரம்பரைக் கதை, கட்டுக்கதை என்பதெல்லாம் நவீனத்துவவாதிகளின் வாயிலிருந்து வருகின்ற அபாயகரமான வார்த்தைகள் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

அடுத்து, படைப்புக் கொள்கையின் அடிப்படையில் மனிதத் தோற்றத்தை விளக்குகிறார்.

“தட்டினால் ஓசை தரக்கூடிய மாற்றத்திற்குரிய கறுப்பு நிறக் களிமண்ணினால் நிச்சமாக நாம் ஆதத்தைப் படைத்தோம்” (15:26) என்ற அல்குர்ஆன் வசனத்தை வைத்து தொடக்க மனிதர்கள் கறுப்பானவர்கள் என்ற அண்மைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்போடு தொடர்புபடுத்தி ஆராய்கின்றார்.

முதல் மனிதனின் நாடு, பாதச்சுவடுகளும் கபுறடிகளும் மனிதத்துவக்கத்தின் மறையா அடையாளங்கள் என்ற தலைப்புகளின் கீழ் இலங்கையின் புவியில் அமைப்பு, இலங்கையின் காலநிலை சுவனத்திற்கு ஏற்ற மற்றொரு சுவனத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

“இலங்கையின் பூர்வீகக் குடிகள்” என்ற தலைப்பின் கீழ் நாகருக்கும் சோனகருக்குமிடையிலான தொடர்பு பற்றி விளக்கப்படுகிறது. இலங்கையின் ஆதிக்குடிகள் வாழ்ந்ததாக அடையாளம் காணப்பட்டிருக்கின்ற பல பிரதேசங்களில் முஸ்லிம்களே பாரம்பரியமாகவும் செறிவாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவ்விரு இனங்களுக்குமிடையிலான அத்தியந்த உறவு பற்றி ஏழு வகையான ஆதாரங்களைக் காட்டி நிரூபித்திருக்கிறார். பின், சோனகர் யவனர்களிலிருந்து வந்தவர்கள் அல்லர். யவனர் என்ற சொல் கையாளப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சோனகர் என்ற பதம் வரலாற்றில் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை தொலமியின் இலங்கை இட விளக்கப்படத்தின் மூலம் நரூபித்திருக்கிறார்.

“இலங்கையில் நபிமார்கள்” என்ற தலைப்பின் கீழ் அவ்வையார் – ஹவ்வா, முருகன் – ஹிழ்ர் ஒப்பீடு செய்யப்படுகிறது. இந்த வகையில் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்கின்ற சமூகங்கள் மத்தியில் நிலவுகின்ற வேறுபட்ட ஆயிரக்கணக்கான கடவுள் பற்றிய நம்பிக்கைகளும் வழிபாடுகளும் வெவ்வேறு நபிமார்களை கடவுளாக்கியதன் விளைவாக ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியப்பாட்டை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கேட்டுக் கொள்கிறார்.

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் குடிமரபு தமிழர்களிடமிருந்து வந்த பண்பாடல்ல. அது முஸ்லிம்களிடமிருந்தே ஏனைய சமூகங்களுக்குச் சென்றது என்பதாகக் கூறுகின்றார். “இஸ்லாமானவர்கள்” என்ற பதம் மதம் மாறியவர் என்ற கருத்திலல்லாமல் முன்னைய தூதுத்துவங்களை ஏற்று வாழ்ந்த சோனகர் இறுதியாக வந்த தூதையும் எவ்வாறு ஏற்று முழுமைப்படுத்திக் கொண்டனர் என்பதை விளக்குகிறார்.

இலங்கைச் சோனகர் உலகின் முதன் மனிதக் குடிகள் என்றால் தமிழர்களின் சாதிப் படிநிலையில் உள்ள கீழ்வகுப்பினர் இஸ்லாத்தை ஏற்றதால் ஏற்பட்டதல்ல. அராபிய ஆண்வழித் தோன்றல் என்ற கருத்தாக்கத்தையும் இவ்வியலில் மறுதலிக்கின்றார்.

சோனக மொழியை உலகின் முதல் மொழியாகக் குறிப்பிடும் மொழி குறித்த மிகக் கூர்மையான கோட்பாட்டுப் பரிசீலனையை மேற்கொள்கின்றார் ஆசிரியர். டார்வினின் உயிரியல் ரீதியான பரிணாமவாதம் சமூகவியலில் மொழியியல் அணுகுமுறைகளில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆசிரியர் மொழிகள் இறைவனின் அத்தாட்சிகள்; அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கும் மொழியையும் பண்பாட்டையும் எவ்வாறு வழங்கியுள்ளான் என்பதை நிரூபிக்கின்றார். மொழியின் பரிணாமம் உண்மையென்றால் மொழிகளுக்கிடையில் ஒற்றுமை வந்திருக்கவே முடியாது என்று கூறுகின்றார். மொழியியல் குறித்த இத்தகைய அணுகுமுறை தமிழுக்கு மிகவும் புதியதாகும்.

சோனக மொழி தமிழ், மலையாளம், தெலுங்கு, துளு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதையும் பட்டியல் போட்டு விபரித்துள்ளார். இவ்வியல் தனியான நூலை பல்வேறு கிளை ஆய்வுகளைச் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளமை இந்நூலின் மற்றோர் சிறப்பம்சமாகும். மொழி பற்றிய இயலின் இறுதி அம்சமாக சோனகருக்கான வரிவடிவம் பற்றியும் பேசப்படுகின்றது.

இறுதியில் “ஒரு வரலாற்று மறதி” என்ற இறுதி இயலில் இருட்குகையிலிருந்து ஒளியை நோக்கி நம்மை ஆசிரியர் அழைத்துச் செல்கிறார்.

அல் ஹஸனாதில் வெளிவந்தது
தேங்க்ஸ்: http://idrees.lk/?p=441

மீள்குடியேற்றப்படாத வடகிழக்கு முஸ்லீம்களின் பரிதாபநிலை!

அளவற்ற அருளாலனின் திருநாம் போற்றி....

இலங்கையில் மூண்ட போரில் வடகிழக்கு முஸ்லிம்களும் கனிசமான அளவில் பாதிக்கப்பட்டவர்களாவர். புலிகளின் ஆக்கிரமிப்புக்கள், சூரையாடல், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள், கொலை மற்றும் கொல்லை போன்ற இன்னோரன்ன செயல்களால் பாதிக்கப்பட்டு இன்னமும் சுமூக வாழ்க்கைக்குள் நுளைய முடியாமல் தவிக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையில் இன்று பொதுவாக காணப்படும் நிலைமையையும் முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லீகள் விடயத்தில் நிலவும் குறிப்பிடத்தக்கதான களநிலைமைகளை நாம் அனைவரும் தெறிந்து கொள்வதோடு, ஊடாக வாயிலாகவும் ஏனைய தகவள் நகர்த்திகள் மூலமாகவும் எமது அரசுக்கும் ஏனைய நாட்டு அரசாங்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டிய தார்மீக கடமையும்இ பொறுப்பும் எமக்கு இருக்கின்றது.

இலங்கை அரசும் வெளிநாட்டு என்.ஜி. ஓக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களின் அபிவிருத்திஇ மீள்குடியேற்றம் மற்றும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் நிலை என்பவை தொடர்பான விடயங்களில் முன்னேற்ற கரமான பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்கின்றன. இது வரவேற்த்தக்க விடயமாகும். ஆனால் இந்த மீள் சீரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முஸ்லீம்கள் தவிர்ந்த தமிழ்மக்களுக்கு மட்டும் முடுக்கிவிடப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!

விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அடிபணிந்து காலத்துக்கு காலம் இடம்பெயர்ந்து சென்ற முஸ்லீம்கள் சகல உடைமைகளையும் இழந்து அவர்கள் பரம ஏழைகளாக மாறியுள்ளனர்.

யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்தோரில் பத்து வீதத்திற்கு மேற்பட்டோர் ஏதோவொரு வகையில் உளரீதியாக பாதிக்கப்பட்டுகள்ளனர்,. இதனை விட மேலும் பல கோடானுகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும்இ ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களும் கூட யுத்த சமயத்தில் அநியாயமாக இழக்க நேர்ந்துள்ளன.

அரசாங்கம் செயற்படும் முறையை கவனிக்கும் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எந்தளவுக்கு விரைவாக சுமூக நிலையை தோற்றுவிக்க முடியுமென்பது சந்தேகத்துக்குரியதாகும். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அநியாயமான முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களது இயல்பு நிலையை மீள நிலை நிறுத்துவதில் அரசாங்கத்திற்கு உண்மையான கரிசனை இருக்குமெனில் அபிவிருத்தி, மற்றும் புனர்வாழ்வு போன்ற விடயங்களில் அரசு கூடிய கவணம் செலுத்த வேண்டும்.

இதன் பயனாகப் பாரபட்சம், பயம், பாதுகாப்பின்மை போன்ற எத்தகைய மனநிலைகளுக்கும் உட்படாது முஸ்லீம்களது பூர்வீகக் கானிகளில் மீளக்குடியேற்றத்திற்கு சாத்தியமாக இருக்கும். இதற்காக அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்குவது தொடர்பான தார்மீகக் கடமை நன்கொடை வழங்கும் நாடுகளுக்கு இருக்கின்றது.

மேலான உடனடி பரிசீலனைக்கு:-

ஏனைய விடயங்களைவிட முதான்மையானதும் முன்னுரிமையளிக்க வேண்டியதுமான முதல் விடயம் யாதெனில் அரை நூற்றாண்டுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சனைக்கு சகல மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஓர் தீர்வை காண வேண்டும். அதே நேரம் இலங்கையின் பிரஜைகள் என்ற வகையில் நம் நாட்டில் வாழும் ஏனையோர் பெறக் கூடிய இட ஒதுக்கீடு முதல் கல்வித்தகமை வரை விகிதாசார அடிப்படையில் இலங்கை முஸ்லீம்களும் பெற வேண்டும்.

வடக்கு கிழக்கு வாழ் முஸ்லீம்கள் தாம் ஏற்கனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக உட்பட்டிருந்த அகதி வாழ்க்கையை மேலும் தொடர தயாரில்லை. அவர்கள் இதற்குப் பின்னும் அடிமைகளாக ஒதுக்கப்பட்டு வாழ்வதை விரும்பவில்லை. அதேநேரம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முஸ்லீம்களது காணிகளில் இராணுவத்தின் உதவியோடு சிங்களக் குடியேற்றம் மற்றும் காணி இட ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகின்றன. இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மட்டுமன்றி இந் நடவடிக்கை மிகக்கண்டிக்கப்பட வேண்டியதொன்று. பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இராணுவத்தின் உதவியோடு முஸ்லீம்களின் காணிகளை ஆக்கிரமிப்பதும், தங்களது சொந்த நிலங்களில் குடியேருபவர்களை பலவந்தமாக வெளியேற்றி அவர்களது குடிசைகளை தீவைப்பதானது இன்னுமொரு பாரிய இனமோதலுக்கு அடித்தளமிடும் செயலாகும் என்பதே எனது கருத்தாகும். இச் செயல் எதிர்மறை விளைவுகளை தோற்றுவிக்கும். எதிர்பார்த்த பயன் கிட்டாது போகும்.

உள் நாட்டில் இடம் பெயர்ந்த ஒவ்வொரு நபரும் உரிமை கோரும் அவரவரது காணிகளுக்குள் உட்செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே காணிக்கு உரிமைகோரும் பிரச்சினைகள் எழும்போது மட்டுமே அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காணலாம். இச்செயல்முறை தற்போது உயர் பாதுகாப்பு வலயங்களாக கருதப்படும் இராணுவத்தினரின் ஆதிக்கத்திற்குட்பட்ட காணிகளுக்கும்இ மேலும்இ தமிழீழ விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக கொடுப்பனவு செய்து அல்லது கொடுப்பனவு செய்யாது தமது அதிகாரத்திற்குட்படுத்திய காணிகளுக்கும்இ பொருந்தக்கூடியதாய் இருக்க வேண்டும்.

இராணுவத்தினரும், ஏனைய படையினரும் முஸ்லீகளது காணிகளில் இருந்து விலகி வேற்று இடங்களுக்கு அவர்களது படைத்தளங்களையும், முகாம்களையும் நகர்த்தி எனது மக்களின் சுமூக வாழ்வுக்கும், அவர்களது மீளபிவிருத்திக்கும் இடமளிக்க முன்வரவேண்டும்.

யுத்தத்தின் போது முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளை மீளமைத்து கொடுப்பதுடன் தாமாகவே முன்வந்து தமது வீடுகளைக் கட்ட விரும்புவர்களுக்கு நிதி உதவியும் அத்தோடு கட்டிட நிர்மாண பொருள்களையும் வழங்க முடியும். இராணுவத்திற்கு ஏற்கனவே நிர்மாணித்த வீடுகளைஇ உள்நாட்டில் இடம்பெயர்நத மக்களின் வீடுகளை மீளக்கட்டி முடியும் காலம்வரைஇ அம் மக்களின் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தமது காணிகளை அவர்களுக்கு விற்ற அல்லது வழங்கிய காணி உரிமையாளர்களை அரசாங்கம் தண்டிக்கக்கூடாது. கிண்ணியா முதல் கிளிநொச்சி வரை மக்களின் (குறிப்பாக முஸ்லிம்களின்) கானிகளில் முட்கம்பி வேலியடைத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சகல இடங்களையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

முஸ்லீம்களது ஆயிரக்கணக்கான வாகனங்கள்: லொறிகள்இ கார்கள்இ உழவு இயந்திரங்கள்இ இழுவைப் பெட்டிகள்இ முச்சக்கர வண்டிகள்இ மோட்டார் சைக்கிள்கள் என்பன திருத்த முடியாதபடி அழிக்கப்பட்டுவிட்டன. பல காணாமற்போயுள்ளன. புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அல்லது அதற்கான நட்டஈடு வழங்கு வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகளில் உள்ளுர் பொதுமக்களின் பங்களிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளில் உள்ளுர் மக்களின் பங்களிப்பு ஓர் நிபந்தனையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஏனைய தொண்டர் நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்த பலர்இ அதே பதவி நிலையில் தொடர்ந்து இருப்பதன் விளைவாக நன்கொடை வழங்கும் நாடுகளிடமிருந்து கிடைக்கும் உதவிகள் ஒழுங்கீனமான முறையில் பகிர்ந்தளிக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே இதில் நன்கொடையாளர்கள் தலையிடுவதற்கான உரிமை இருக்க வேண்டும்.
அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளுக்கு உறுதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால் முஸ்லிம்களுக்கு எவ்வித உறுதிகளையும் வழங்கியதாகத் தெறியவில்லை). மக்கள் தமது சொந்த வீடுகளில் இன்னமும் குடியமர்த்தப்படாத நிலையில் உறுதிகளை வழங்குவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். உறுதிகள் வழங்க வேண்டுமாயின் உரிமையானர்கள் தத்தமது காணிகளை அடையாளம் காட்டி அதில் மீளக்குடியேறும் வரை அரசாங்கம் பொறுத்திருக்க வேண்டும்.

இனங்காண முடியாத நபர்களுக்கு பெறுமதிமிக்க காணிகள் மனம் போனவாறு வழங்கப்படுகின்றன. இதன் நோக்கம் தெரியவில்லையென்பதால் இவை வெளிப்படையானதாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள பெறுமதிமிக்க காணிகள் பல நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது உள்ளுர் மக்களுடன் புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால் இந் நடைமுறை ஓர் ஒழுங்கற்ற செயலாக கருதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

யுத்தத்தின் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் இழந்த உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும்;; நட்டஈடு வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்படவேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமென்ற உறுதிமொழியை ஜனாதிபதி ஏற்கனவே வழங்கியுள்ளார். (இது முஸ்லிம்களுக்குமா அல்லது முஸ்லிமல்லாத தமிழர்களுக்கு மட்டுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது!?).

பாதிக்கப்பட்ட வடகிழக்கு முஸ்லீம்களின் பரிதாப நிலையை அவதானித்து, அம்மக்களின் வாழவில் சகஜ நிலை ஏற்பட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு இவற்றை முன்மொழிகின்றோம்.

மீளக்குடியேறிய மக்களுக்காக மட்டுமல்லாமல்இ கால்நூற்றாண்டுக்கு மேல் அமைதியானஇ சமாதான வாழ்விற்காக ஏங்கித்தவிக்கும்இ இந்நாட்டின் சகல மக்களின் விடிவிற்காக இவ்வேண்டுகோள் விடுக்கப்படுகின்றதேயன்றிஇ யாரையேனும் புண்படுத்துவதற்காகவோ அன்றேல் சங்கடப்படுத்துவதற்காகவோ அல்ல என்பதை பணிவுடன் அறியத்தருகின்றோம். இயல்பு வாழ்க்கை மீண்டும் ஏற்படுவதற்கு முன்னர் அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை அமுல்;படுத்த முயற்சிப்பதன் மூலம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது என்பதை இலங்கை அரசின் மனதில் பதிய வைக்க வேண்டுமென்று மிக நேர்மையான முறையில் தங்களை வற்புறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.

மக்கள் பார்க்குமிடம் எங்கும் அந்நியர்களும்இ புதிய சுற்றாடலும் அமைந்தஇ புதிய பிரதேசத்திலுள்ள அந்நியர் நிலத்தில் வாழ்கின்றோம் என்றில்லாதுஇ தாம் இடம் பெயர் வதற்கு முன்னர் வாழ்ந்த அதே இடங்களுக்குஇ எவ்வித அமைப்பு மாற்றமுமின்றி தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் வந்துள்ளோமென்றஇ உணர்வு அவர்களுக்கு ஏற்பட வேண்டும்.

இவை சரியாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இலங்கையில் எழுச்சியும், மலர்ச்சியும் துள்ளி விளையாட பரவசத்துடன் வாழ்க்கைக்குள் நுளையும் மக்களைத்தான் நம் நாட்டில் பார்க்க முடியும். மாறாக கவணக்குறைவுடன் இருந்தால் மீண்டும் இருள் சூழ்ந்து கொள்வத மிகத் தொலைவில் இல்லை!!

எல்லாம் வல்ல நாயம் நம்மைப் பாதுகாப்பானாக!

தமிழ் - முஸ்லிம் உறவுகள்: வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் - 20 வருடங்களுக்குப் பின்பு! : SLIF & SLDF

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

சமாதானம் புரிந்துணர்வு, பொருளாதார மேம்பாடு, அரசியல் தீர்வு ஆகியவற்றை முன்னெடுக்க சமூகங்களிடையே சிதைந்துபோன சமூக உறவுகளை கட்டியெழுப்பல் அவசியம். இலங்கையை இன்று எதிர்கொள்ளும் ஜனநாயகம், நீதி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் போன்ற அடிப்படை அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள இனங்களுக்கான உறவுகள் கட்டியெழுப்பப்படுவது அவசியம்.

நீண்டதொரு போரின் பின் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நீக்கவோ துருவப்பட்டுள்ள சமூகங்களின் முரண்பாடுகளை களைந்து ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவோ அரசு மட்டத்திலும் சிவில் சமூக மட்டத்திலும் போதிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படாத இன்னிலையில் சமூக உறவுகளை கட்டியெழுப்ப நாம் என்ன பாத்திரம் வகிக்கலாம்.?

சமூகங்கள் தொடர்ந்தும் துருவப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு புதிய பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சமூகங்களுக்கிடையான இடைவெளி மேலும் அதிகரிக்கும் அபாய நிலை.

சொந்த இடங்களுக்கு திரும்புதல், மீள் குடியேற்றம், சமூகங்களுக்கிடையான புரிந்துணர்வு என்பன பிரிக்கமுடியாது பின்னிப்பிணந்துள்ளன. எனவே சொந்த இடங்களுக்கு மீளுதல், மீள் குடியேற்றம் என்பன சமூகங்களுக்கிடையான உறவுகளை வலுப்படுத்தும் வகையிலேயே நிகழ்த்தப்படவேண்டும்.

இந்த பின்னணியில் தான் 20 வருடங்களுக்கு முன் வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை அணுகவேண்டும்.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் புத்தளத்தில் அகதிமுகாம்களில் கடந்த 20 வருடங்களாக அல்லல்படும் அதே வேளை நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்த தமது பாரம்பரிய பிரதேசங்களை பௌதீக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் படிப்படியாக இழந்துள்ளனர்.

எனவே வடமாகாண முஸ்லிம்களும் வட கிழக்கின் ஏனைய பிரதேசங்களில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமது சொந்த இடங்களுக்கு மீள சம உரிமையுள்ளவர்கள் என்ற அடிப்படையிலேயே இம்மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுவே சமூகங்களுக்கிடையான நல்லுறவை கட்டியமைக்கும்.

ஜனநாயகம், நீதி, சமாதானம் ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து சக்திகளும் வடமாகாண முஸ்லிம்களினதும் ஏனைய பிரதேசங்களில் இடம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் மீள் குடியேற்றமானது நீதியானது உடனடியாக மேற்கொள்ளப் படவேண்டியது என குரல் கொடுக்க முன்வர வேண்டும். இதுவே இன்றைய சவால்.

Nirmala ராஜசிங்கம் - SLDF Steering கோம்மிட்டீ

நன்றி: http://thesamnet.co.uk/?p=23013

தமிழ்பேசும் மக்கள்: அடையாள இருட்டடிப்பு - இலங்கை முஸ்லீம்கள் சோனகர்

- நிஸ்தார் எஸ் ஆர் எம்

1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்த இன அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 1983இல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும் இனப்பிரச்சினையின் உச்சகட்ட காலங்களில் ஆங்காங்கே முளைவிட்ட ஒரு கேள்வி இப்போது மரமாகிக் கிளை பரப்பியுள்ளது. இது பெரு விருட்சமாகி புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அழகாய், அளவாய் கத்தரித்து பராமரித்து வளர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் மிகத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கின்றது.

பல்லின மக்களைக்கொண்ட இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சிங்கள இனத்தின் சார்பில் இலங்கை அரசும் (ஜனாதிபதி நீங்கலாக) தமிழினத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகளும் (வேறு யாரும் சேர்க்கப்படாமல்) பிரதிநிதிகளாகச் செயற்படுவதால் இலங்கையில் இரண்டு இனங்கள் மட்டும் தான் உள்ளன என்பதோ அல்லது வேறு இனங்களுக்கு அரசியலை அடியொட்டியதான பிரச்சினைகள் இல்லை என்பதோ பொருளல்ல. தவிர, போரிட்ட இரண்டு இனங்களும் ஏதோ வொரு தீர்வை அடைந்தால் அது எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தும் என்ற உத்தரவாதமுமாகாது. ஏனெனில் இலங்கையின் இன்னுமொரு சிறுபான்மையினம் தொடர்பான அதன் அடையாளப் பிரச்சினையில் சில சிக்கல்கள் இருப்பதால் இனப்பிரச்சினை தொடர்பாக அதன் பங்களிப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

“இலங்கை முஸ்லிம்கள்” என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது. இதில் 1வது, கிழக்கிலங்கையில் தொழுகை நேரத்தின்போது வயதுபேதமின்றி சிறியோர் முதல் தள்ளாடும் வயதினர்வரை நூற்றுக்கு மேற்பட்டோர் மசூதிக்குள் வைத்து புலிகளால் ஒரே நேரத்தில் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 2வது அதே ஆண்டில் யாழ், மன்னார், முல்லைத்தீவு ஆகிய தமிழ் - முஸ்லீம் பூர்வீக பகுதிகளிலிருந்து பலாத்காரமாக ஒரு சில மணிநேரத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை.
மேற்படி இரண்டு சம்பவங்களில் இருந்தும் எழும்பிய புதிய கேள்விகள் இக்கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினையாகிய “சிறுபான்மையினம்” என்ற பதப்பிரயோகத்தின் சரியான விளக்கமொன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இந்த “முஸ்லிம்களை” விடுதலைப்புலிகள் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதப்பிரயோகத்தின் கீழ் அடக்கித் தாம் இனப்பிரச்சினை விவகாரத்தில் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் என்றும், தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் ஏற்படும் தீர்வும் உடன்பாடும் “தமிழ் பேசுவோர் எல்லோருக்குமான தீர்வே” என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது போல் இலண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் வானொலிகளும் பத்திரிகைகளும் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பாக எந்தவித விளக்கமுமின்றி “இஸ்லாமியத் தமிழர்” என்றும் “தமிழ் பேசும் முஸ்லீம்கள்” என்றும் இந்த இனத்தை அடையாளப்படுத்துகின்றனர்.
ஓரு இனம் தொடர்பான மேற்படி அனைத்து பதப்பிரயோகங்களும் அரசியல்ரீதியில் தெளிவை ஏற்படுத்தாதது மாத்திரமின்றி பிற்காலத்தில் புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கக் கூடியதாகவே உள்ளன.

விடுதலைப்புலிகளின் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதம் இனபேதமின்றி தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் 1990இல் நடந்த துயரச் சம்பவங்களும் இதுபோன்ற சிறிய அளவிலான குரங்கு பாஞ்சான், ஏறாவூர், மூதூர் போன்ற இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும், இனித் தொடரப் போகும் சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளின் சார்பில் சராசரி மனிதர்தானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள், நியாயங்கள், உத்தரவாதங்கள் எதுவுமே இல்லை.

எனவே “தமிழ்பேசுவோர்” என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது மிகத்தெளிவு. மேலும் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் தான் புலிகள் என்றால் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) உடனான ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? அது எதுகுறித்துச் செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கப்பால் அப்படியொரு உடன்படிக்கை தேவையும் இல்லாதது. (ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தெளிவாகப் பகிரங்கப் படுத்தப்படவில்லை). ஆகவே தமிழரும் முஸ்லீம்களும் அரசியல்ரீதியிலும் வேறுபட்டவர்கள் என்பது மிகத்தெளிவு.

மர்ருபுர்ரத்தில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் கூறும் “இஸ்லாமியத் தமிழர்”, தமிழ் பேசும் முஸ்லீம்கள், என்ற பதப் பிரயோகங்களும், மயக்கம்தரும் பண்புகளையே கொண்டுள்ளன. ஏனெனில் தமிழ் இனத்தில் உள்ளவர்கள் “சைவத் தமிழர்” என்றோ, “கிறிஸ்தவத் தமிழர்” என்றோ மதரீதியில் அடையாளம் காணப்படுவது இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவர்களும் கிறீஸ்தவர்களும் (அதன் உட்பிரிவினரும்) இனரீதியில் தமிழரென்றே கொள்ளப்படுகின்றனர். தமிழ் பேசும் சைவர், தமிழ் பேசும் கிறிஸ்தவர் என்று யாரும் அழைக்கப்படாத நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மாத்திரம் வரையறைக்குட்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். இதிலிருந்து தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்போர் இனத்தால் தமிழர் அல்லர் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சிங்களம் பேசும் முஸ்லீம்கள் என்போரின் இருப்பையும் உறுதி செய்கின்றது. இது ஒருவகையில் சிங்களம் பேசும் கிறிஸ்தவரின் நிலைபோன்றது.

சிங்களம் பேசும் கிறிஸ்தவரை தமிழ் இனம் உள்வாங்க முடியாது. காரணம் அவர்கள் இனத்தால் சிங்களவர். அதேபோல் தமிழ்க் கிறிஸ்தவர் மதத்தால் சிங்களவர் போன்று கிறிஸ்தவராயினும் இனத்தால் தமிழராகவே இருக்கின்றனர். (இது பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது போல் காணப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சாரும் இனத்தை அடிப்படையாகக் கொண்டது.) எனவே இங்கு சிங்களம் பேசும் முஸ்லீமை எவ்வாறு சிங்களவர் எனக் கருதக் கூடாதோ, கருத முடியாதோ, அதேபோல் தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழ் பேசும் முஸ்லீம்களை தமிழர் என்று வரையறுத்துவிட முடியாது.

இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு விடயம், புதிதாகச் சமயம் மாறுவோர், சமயம் மாறி முஸ்லிமாகவரும் தமிழரும், சிங்களவரும் சமயத்தால் முஸ்லீம் என்பவரே தவிர அவர் இனத்தால் இன்னும் தமிழரும் சிங்களவருமே.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பௌத்தம் செழிப்புற்றிருந்ததை வரலாறு கூறுகின்றது. அப்போது பௌத்தத்தைப் பின்பற்றிய தமிழர் சமயத்தால் பௌத்தர் என்று இனங் காணப்பட்டதால், அவர்களின் இனம் சிங்களம் என்றாகி விடவில்லை. அவர் அன்றும் இன்றும் என்றும் தமிழரே. அதேபோல் சமயத்தால் முஸ்லிமாக இருக்குமொருவர் சைவராகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ சமயத்தை மாற்றிக்கொண்டாரென்றால் அவர் சைவர், கிறிஸ்தவர் அல்லது பௌத்தரே தவிர அவரின் இனஅடையாளம் தமிழர் என்றோ அல்லது சிங்களவரென்றோ மாறிவிடப் போவதில்லை. அப்படியானால் இங்கு எழும் நியாயமான கேள்வி இந்த இலங்கை முஸ்லீம் என்போர் இனரீதியில் யார் என்பதே.

இதற்கான பதில்
இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கி முன்னேறும் இந்த முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நியாயமானதும் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதுமான (Politically crucial) விடயம் முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாடு ஆகும்.

இக்கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தவறுகளும் செய்யத் தவறும் விடயங்களும் நாளைய அமைதியான ஒன்றுபட்ட இலங்கையில் அல்லது சிங்களவர் தமிழர் சுயாட்சிப் பிரதேசங்கள் என்ற அமைப்புக்குள் அல்லது ஸ்ரீலங்கா, தமிழீழம் என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்.

இன்று சிங்கள பேரினவாதம் (மறைமுக) தமிழ்ப் பேரினவாதம் என்பவை மாத்திரமல்ல வளர்ந்து வரும் தனி பௌத்த மதவாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகின் முதல் பிக்குகளாட்சி (Theocracy) ஆட்சிக்கான நாடிப்பிடிப்புகளையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. (ஆனால் தமிழரிடையே மதவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறி அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது).

இலங்கை முஸ்லீம்கள் இன அடையாளம் இல்லாமல் மத அடையாளத்திலேயே தமது அரசியலை நடத்த விரும்பினால் பல இனங்கள் வாழும் நாட்டில் மாறுபட்ட சூழலிலுள்ள ஒரு நாட்டில் அதிலும் நாம் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாய் வாழும் நாட்டில் சர்வதேசங்களின் கவனம் அதிகரித்து வரும் ஒரு நாட்டில் அது நமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக விடுதலைப் புலிகளின் முஸ்லீம்கள் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கும் போது அதில் சந்தர்ப்பவாதம் இழையோடுவதை இலகுவாகக் காணலாம். அவர்களில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையை விடுத்து இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முஸ்லீம்களை ஒரு கலாச்சாரக் குழுவாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்தக் கலாச்சாரக் குழு என்ற சொற் பிரயோகம், தமிழ் பேசும் மக்கள் என்பதை விடவும் குறைவான நிலை. ஒரு மக்கள் கூட்டத்தில் பல வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படலாம். ஒருவன் உணவு உண்ணும் முறையிலிருந்து நாட்டை நிர்வகிக்கும் விடயங்கள் வரை பலவிதமான கலாச்சாரப் போக்குகளை கடைப்பிடிக்கலாம். இனம் என்ற பரந்த பரப்புக்குள் கலாச்சாரம் என்பது ஒரு சிறு பகுதியே. சரி ஒரு பேச்சுக்காக கலாச்சாரக் குழு என்பதை ஏற்றுக் கொண்டாலும் அக் குழுவின் நிலை என்ன, உரிமைகள் என்ன என்பதற்கு இன்னும் விடை கொடுக்கப்படவில்லை.

இதைவிடவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் அதன் பிறகு அவர்கள் தனியான குழுவாக (Entity) பேச்சு வார்த்தை மேசைக்கு வரலாமா என்பது பற்றித் தீர்மானிக்கலாம் என்று கூறியது மிகவும் அவதானத்துக்குரியது.

ஆலோசகர் பாலசிங்கத்தின் அரசியல், கூட்டல் கழித்தல் படி ‘இலங்கை முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர்கள். 1990களில் துடிப்போடு முன்னேறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அதன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரஃப்பின் திட்டமிட்ட கொலையின்பின் துண்டு துண்டாகி முஸ்லிம்களின் அரசியல் குரல் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது’ என்பதாகும்.
‘இலங்கை முஸ்லிம்கள் தனியான பிரிவினர் எனவே நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முன்னெடுப்புகளில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியது அவசியம். அதை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் உத்தரவாதப்படுத்துகிறோம். ஆகவே முஸ்லிம்கள் அதற்கான அதிகாரத்தை அவர்கள் விரும்பும் தலைமைக்கு அல்லது கட்சிக்குக் கொடுக்கலாம்’ என்று பாலசிங்கம் கூறி இருந்தால் அதில் சந்தேகிக்க எந்த விடயமும் இல்லை. இதைவிடுத்து முஸ்லிம்கள் முதலில் ஒன்றுபடுங்கள் (ஒன்றுபடமாட்டார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு) அப்புறம் மிகுதியைப் பார்க்கலாம் என்பது இனப்பிரச்சினையின் சமாதானத் தீர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களுக்குத் தனியிடம் இல்லை என்பதற்கான முன் அறிவிப்பாகும்.

இந்த இடத்தில் கலாநிதி சித்தீக்கின் கூற்றொன்றும் சாலப்பொருந்தும். அதாவது முஸ்லிம்களை விட மிக அதிகமாக தமிழர்களே இன்று பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களின் பிரிவை பத்துக்கும் மேற்பட்டதாக அடையாளங் காணலாம் என்பதாகும். ஆக, இங்கு எத்தனையாக யார் பிரிந்துள்ளனர் என்பது பிரச்சினையல்ல. பேச்சுவார்த்தைக்கு யார் தகுதியான பிரிவினர் என்பதே முக்கியம். அரசதரப்பு, தமிழர்களே முதலில் ஒன்றுபடுங்கள். அப்புறம் மீதியைப் பார்க்கலாம் என்றால், போர் தொடருமே தவிர அருமையான இந்தச் சமாதான ஒப்பந்த சூழல் இன்று இருந்திருக்காது. என்றும் இருக்காது. ஏனெனில், ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ், தமிழர் எல்லோரும் ஒன்றுபடுவதென்பது நடக்க முடியாத விடயம்.

இலங்கையில் முஸ்லிம் என்ற சமயவழிப் பதப்பிரயோகம் இலங்கையின் எதிர்கால அரசியலில் அவர்களை ஒரு தேசிய இனத்தின் அந்தஸ்திலிருந்து கீழிறக்கிவிடும். ஆகவே அவர்கள் தமது இனத்தின் பெயரை தூசுதட்ட வேண்டும்.

இலங்கை முஸ்லீம்கள் சமய அடையாளத்தினூடே அரசியலில் செயற்பட விரும்பினால் நாளை சிங்கள இனத்தின் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களின் சிறுசிறு சமயப் பிரிவினரும் (Cult), ஏன் முஸ்லீம்களின் உட்பிரிவினரும் கூட தங்கள் இருப்புக்கான சட்ட அங்கீகாரம் கோரலாம். இலங்கையின் இன்றைய கிறிஸ்தவர், சிங்கள பௌத்தர்களின் உன்னிப்பான அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். சமயரீதியான நெருக்குவாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும்போது அதற்கான நிவாரணமாக முஸ்லீம்களுக்கான பிரத்தியேக ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் கோரலாம்.

விடுதலைப் புலிகளும் கூட முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைத் தட்டிக் கழிக்க தமிழ் கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி தமதாட்சியில் ஒரு சமயப் பிரிவினருக்கு மாத்திரம் பிரத்தியேக சலுகை தரஇயலாது எனலாம். நிலைமையை தங்களது அடக்குமுறைக்குச் சாதகமாகவும் பயன்படுத்தலாம்.
இதையெல்லாம் விட மிகப் பயங்கரமான விடயம், விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேரலாம். அதிலும் விஷேடமாக அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்ந்து இலங்கை முஸ்லீம்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டு மிக இலகுவாக ஓரங்கட்டி விடலாம். இது அதீத கற்பனை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளினதும் பேரினவாதிகளினதும் கைவந்த கலை. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம், நாட்டு நிர்மாணம், உலக ஒழுங்கு, நாகரீக உலகு என்ற பதப்பிரயோகங்கள் அவரவர்களின் நலன் கருதியே பொருள் வழங்கப்படும்.
ஆகவே நாம் நமது இனப்பெயரில் அரசியல் நடத்துவதே அரசியல் சாணக்கியமாகும் (Political manoeuvring). நமது இனத்தின் பெயர் நமது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. சிங்களத்தில் “யோனக்க” என்றும், தமிழில் “சோனகர்” என்றும் ஆங்கிலத்தில் “மூர் (MOOR)” என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது எமக்கு இழுக்கல்ல. இது ஒரு காரணப் பெயர். எந்த இனமும் தூய்மையான இனமல்ல. அதனால் மாசுபட்டவர் என்ற பொருளல்ல.

நாம் ஒரு கலப்பினம். ஓன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ், சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக்கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர் தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.

இந்தச் சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரம் அல்ல, மொரோக்கோ, தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுக்கின்றனர்.

இலங்கைச் சோனகர்களின் இருப்பு, இஸ்லாம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு அல்லது அதன் சமகாலத்தில் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆக, சோனகர் என்பதை இஸ்லாத்துடன் முழுக்க முழுக்கத் தொடர்புபடுத்தி தமிழரில் இருந்தும் சிங்களவரில் இருந்தும் மதமாற்றம் பெற்றோர் எனச் சில இலண்டன் வானொலிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் கூறிவருவது நிரூபிக்கப்பட முடியாத வரலாற்றுப் பிழை. இலங்கைச் சோனகரின் தோற்றமும் வாழ்வும், அதன் மொழி, கலாச்சாரத் தாக்கங்கள், ஐரோப்பியப் படையெடுப்புக் காலங்களில் அந்த இனம் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்பன எல்லாம் நீண்ட வரலாறு ஆகும்.

ஆக, இலங்கைச் சோனகர் என்போர் தனித்தவொரு இனம். அவர்கள் ஒரு தேசியம் (Nation). அந்தத் தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) அதற்குண்டு. தேவைப்படின், நிபந்தனைகளுடன் கூட்டுச் சேரவும் (இதுதான் விடுதலைபுலிகள் - முஸ்லிம் காங்கிரஸ் வன்னிச் சந்திப்பும் ஒப்பந்தமும் என்றால் பாராட்டப்பட வேண்டியதே) தனியே பிரிந்து செல்லவும் அதற்கு உரிமையுண்டு.

இந்த உரிமையைத்தான் இதுவரை காலமும் இலங்கையின் பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு கொடுக்க மறுத்து வந்தனர். இப்போதும் மறுக்க முயல்கின்றனர். சுயநிர்ணய உரிமையை தமிழர் தரப்பு சோனகர்களுக்குத் தரமறுத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமற்றதாகிவிடும். அது அவர்களுடைய போராட்டத்தினை போலியாக்கிவிடும்.

மேலும் ஏதாவது ஒரு இடத்தில் இனசுத்திகரிப்பு (Ethnic Cleancing) என்றால் சற்று நின்று உலக நாடுகள் அப்படியா என்று கேட்கின்றன. அதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென முன்வருகின்றன. புயல் என்றால் வள்ளம் என்றால் பூகம்பம் என்றால் நோய் என்றால் உதவ முன்வரும் நாடுகள் கூட ஒரு சமயத்தவருக்கு பிரச்சினை என்றால் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் உதவ முன்வருவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மதத்தவருக்கு எதிரானவருக்கு கை கொடுத்து உதவுகின்றன. இதில் உள்நாடு வெளிநாடு என்ற பேதமெல்லாம் கிடையாது.

இவை அனைத்தையும் நாம் கவனத்தில் கொண்டால், உலகின் சமகாலப் போக்குக்கேற்பவே எமது உரிமைகளைப் பெறவும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். சமயம் என்ற போர்வைக்குள் எமது அரசியலுக்கு பலம் சேர்க்க முயலலாம். ஆனால் இனம் என்ற வலுவான அடித்தளத்தில் இருந்து நமது கோரிக்கைகள் பிறக்க வேண்டும் என்பது எனது வாதம்.

(தேசம் இதழ் 17 - 2004) & (தேசம் இதழ் 18- 2004 )

நன்றி: http://thesamnet.co.uk/?p=23382

Tuesday, November 23, 2010

அளவற்ற அருளாளன் திருநாமம் போற்றி....

உணர்வோமாக!

அன்பின் சகோதர சகோதரிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
இஸ்லாத்தின் எதிரிகள் வேற்றுமைக்குள் ஒற்றுமையைப் புனைந்து கொண்டு இந்த ஏகத்துவச் சமூகத்தைக் குதறிக்கொண்டிருக்கின்றன. நாமோ இன்னும் ஒற்றுமைக்குள் வேற்றுமையத் தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம். இது ஆரோக்கியமான நம் சமூகத்தின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கவல்லது என்பதை ஏனோ நாம் மறந்து விட்டோம்.

குழுவாதங்களில் குதறப்படும் - ஓர் அப்பாவிச் சமூகம்
குற்றுயிரும் குறையுயிருமாய் துடிதுடிக்கும் துக்கம் நிறை காட்சி!?

இயக்கங்கள் இன்று நோக்கம் மறந்த நிலையில் பரிதாபமாக பயணிப்பதாய் உணரவேண்டியுள்ளது. நல்ல எண்ணத்துடன் களமிறங்கும் எந்த அமைப்பும் குழுவாதம், இயக்கவாதம் போன்றவற்றை கண்டிப்பாக களைந்து தங்களை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் 'குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டவர்க'ளைப் போன்றாகிவிடும்!

இலக்கு மறந்த இயக்கங்கள் ஒருபுறம்
இயங்க மறந்த இயக்கங்கள் மறுபுறம்!

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே!
ஒரு சமூகத்தின் வெற்றிப்பயணத்தில் அதன் 'தடுமாற்றமில்லா கொள்கையும்', 'ஸ்திரமிக்க ஐக்கியமும்' மிக முக்கியமான இரு காரணிகளாகும். இந்த இரண்டிலும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்ததன் காரணத்தால் தான் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்து சுமார் 20 வருடங்களுக்குள் ஒரு அரசை நிருவ முடிந்தது. இன்றளவிலும் மேற்கத்தேய ஆராய்ச்சியாளர்கள் அதற்கான இரகசியத்தைத் தேடி வருகிறார்கள்.

எமது சமூகத்தின் வெற்றியானது எமது ஐக்கியத்திலும், சகோரத்துவத்திலும் தங்கியிருக்கின்ற அதே நேரம் இஸ்லாத்தின் அச்சானியாகத் திகழ்கின்ற அதன் கொள்கையை சரியாகப் புரிந்து கொள்வதிலும்தான் கானப்படுகின்றது என்பதனை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம்.

ஏகத்துவமுண்டு, ஏகன் தந்த வான்மறையுமுண்டு - அத்துடன்
ஏக்கம் தனைச் சூழ, ஏளனங்களையும் சுமத்தல் தகுமா?!

நேற்று இருந்ததைவிட இன்றைய இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சியானது கொடூரமானதாகும். இன்றைய கெடுபிடிகளை விட நாளைய நடவடிக்கைகள் நம்மை இலகுவாக ஆக்கிரமிக்கவல்லது. எதிர்வரக் கூடிய நவீன யுகத்தின் நாளைய நடப்புக்கள் நம் சமூகத்தை சுக்கு நூறாக உடைக்கவள்ளது! எனவே சிந்தித்த செயலாற்ற வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு.
குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களைப் பொருத்தவரை, இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் இச்சமூகத்தின் ஐக்கியத்திற்காகவும் செயற்படுவதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மாறாக அரசியலமைப்புக்களைப் போன்று தங்களை வளர்த்துக் கொண்டு சமூகத்தைத் துண்டாடும் தீய சக்கியாக விஸ்வரூபம் எடுக்காமல் தம்மைக் காத்தக் கொள்வது இன்றியமையாத ஒன்று என்பதனை நாம் கவணத்திற் கொள்வோம்.

அதேபோன்று கீழ்வரும் சில விடயங்களை நாம் கவணத்திற் கொண்டு செயலாற்றினால் எமது சமூகத்தின் விடிவுக்கு காரணமாக அவை அமையும் என்பது அடியேனின் எதிர்பார்ப்பாகும்:
1- ஒரே கொள்கையின் அடிப்படையில் பிரிந்து கிடக்கும் இயக்கங்கள் அல்லாஹ்வுக்காகவென விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயற்படல்.
2- சாத்தியக் கூறுகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக (இரு இயக்கங்கள் அல்லது அமைப்புக்கள்) இனைந்து செயற்படுதல்.
3- அடிப்படை அம்சங்கள் தவிர்ந்த கிளை அம்சங்களில் நெகிழ்வு மனப்பான்மையோடு தம் கருத்தக்களை முன்வைத்தல்.
4- பிரர்கருத்தை தரவறாக கருதும் பட்சத்தில் லாவகமாகவும், ஹிக்மத்தாகவும் ஆதாரத்தின் அடிப்படையில் சுட்டிக்காட்டல்.
5- முடியுமானவரை நமக்குள் தோன்றும் வாத-பிரதிவாதங்களை அம்பலமாக்கி அந்நிய மதத்தினர் எள்ளி நகைக்குமளவிற்கு கொண்டு செல்லாது பக்குவமாக தீர்வு காண முற்படுதல்.
6- எந்த இயக்கத்தினரும் சகோதர இயத்தினரை சாடாது தமது அடக்கத்தையும், பெருந்தன்மையையும் காத்துக் கொள்ளல்.
7- முஸ்லீம்களுக்கென ஓங்கி குரல் எழுப்பக் கூடிய ஊடகங்களை உருவாக்குதல், நிறுவுதல்.
8- ஊடகத்துறை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் ஊடகவியளாலர்களை ஊக்குவித்தல், வளர்த்தல்.
9- நமது சமூகத்திலுள்ள கல்வித்தாகமுள்ள இளைஞர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைசார்ந்த கல்வி மேம்பாட்டிற்காக உதவுதல்.
10- சமூக எழுச்சிக்கான முன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு செயற்திட்ட அமுலாக்களை நடைமுறைப்படுத்தல்.
11- சமூக அபிவிருத்தி தொடர்பான பயிற்சிப்பட்டறைகள், ஊக்குவிப்பு முகாம்கள், சிறு சிறு சீர்திருத்த மற்றும் புத்துனர்ச்சி மையங்களை நிறுவி தொடர்ந்தேர்ச்சியான வழிகாட்டல்களை வழங்கள்.

இவ்வாறான நடவடிக்கைகள் வீழ்ந்து கிடக்கும் நம் சமூகத்தை எழுப்பி நிறுத்த வல்லவைகளாகும். எனவே இவ்வாறான செயற்திட்டங்களில் படித்தவர்கள், சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் மற்றும் உலமாக்களின் பங்கானது இன்றியமையாததாகும்.

எனவே நம் எதிர்காலத்தை செப்பனிட்டு செம்மையாக்குவதற்கு நம் ஒவ்வொருவரினாலும் இயலுமான பங்களிப்பை நல்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
யா அல்லாஹ்! இந்த சமூகத்தை ஈமானிலும், ஐக்கியத்திலும் உறுதிப்படுத்தி ஈருலக வெற்றியை அடையக் கூடிய ஒரு தன்னிகரற்ற சமூகமாக மாற்றியருள்வாயாக!
- ஆக்கம்: அபூ அரீஜ்

'முஸ்லிம்லங்கா' இணையதளம்

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பான வாசகர்களே!
இந்த வெப்தளமானது இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தை கவணத்திற் கொண்டு இன்று முதல் வளம் வரவுள்ளதென்பதனை மிக மகிழ்ச்சியோடு தெறிவித்துக் கொள்கின்றோம்.

நமது சமூக நல்லெழுச்சிக்காக நாம் தான் பாடுபட வேண்டும். உங்களது ஒத்துழைப்பும் பங்களிப்பும் இந்த தளத்திற்கு இன்றியமையாததாகும். உங்களது ஆக்கங்கள், தகவல்கள், நம் இலங்கை சமூகம் பற்றிய செய்திகள், நடப்புக்கள், எதிர்காலத்தில் எவவ்வாறு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்பதனை மையமாக வைத்து உங்களது கருத்துக்கள், ஆக்கங்கள் போன்றவற்றை எமக்கு நீங்கள் அனுப்புவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

அல்லாஹ் நம் அனைவரினதும் நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக!
- நிர்வாகி